ஆசிரியர்கள் போராட்டம் - நியாயம் யார் பக்கம்???
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நடந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து அரசுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்தனர். ஆனால், மாறாக இப்போராட்டம் இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும்பாலும் எதிர்ப்பையே பெற்றுள்ளது. மிகவும் குறைந்த வருமானம் கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு இப்போராட்டம் எரிச்சலையே தருகிறது. இப்போராட்டத்தின் பிண்ணனி மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் என்னவென்று காண்போம். போராட்டம் - காரணம் மற்றும் பிண்ணனி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ( JACTO GEO- Joint Action Council of Tamilnadu Teachers Organisation) அரசிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர். அவற்றில் முக்கியமானவை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பின் படி ...