கருவாட்டுக் குழம்பு
தான் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல், பணியில் மனநிறைவும் இல்லாமல் வேலைசெய்யும் பலரில் அவனும் ஒருவன். பழமையான துறையாயினும் பலரால் மறக்கப்பட்டு வரும் அஞ்சல் துறையில் பணிபுரியும் அவனுக்கு அருகிலுள்ள கடலோர கிராம மக்களுக்கு கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி. தனிநபர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களைத் தொழில்நுட்ப வளர்ச்சி கையகப்படுத்தி விட்டமையால், வங்கி மற்றும் இதர தொழில் சார்ந்த கடிதங்களே எஞ்சியுள்ளன. தனது பணியில் இல்லாத மன நிறைவை கடலின் அலைகளும் இரைச்சல்களும் அவனுக்கு அளித்துக் கொண்டிருந்தன. மனிதர்களின் துன்புறுத்தல்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த சமுத்திரத் தாயின் ஒரு நாள் சீற்றத்திற்கு இரையான கிராமங்களில் அதுவும் ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நகரங்கள் கடலுக்குள் மூழ்கியதாக சொல்லப்படும் கதைகளை உண்மையென உணர்த்தும் கிராமம் அது. சிதிலமடைந்த வீடுகளின் சுவர்களே ஆங்காங்கு எஞ்சியிருக்கின்றன. சில குடும்பங்கள் மட்டுமே சேதமடைந்த வீடுகளை சரிசெய்து அங்கு வாழ்ந்து வருகின்றனர். தனியாக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப் பட்டாலும் தொழிலுக்காக அம்மக்கள் அங்கு வந்துதானே ஆகவேண்டு...