விருந்து
மாநகரின் பிரதான சாலை. மேம்பாலங்கள் அமைந்திருப்பினும் நெரிசல்களுக்குக் குறைவேதுமில்லை. பலரைப் போலவும் தனது கடந்தகால அடையாளங்களை மறந்து தனக்கென புதியதோர் அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற கனவுடன் மாநகரில் குடியேறியவர்களில் அவனும் ஒருவன். அவனது அறையிலிருந்து சாலைக்கு செல்லும் வழியில் உள்ள குறுகலான நடைபாதையில் அமைந்துள்ளது அய்யனார் ஓட்டல். பட்ஜெட்டுக்குள் சாப்பிடவிரும்பும் அசைவப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். அக்கடையின் மசாலா வாசனை தெருவெங்கும் மணந்துகொண்டிருந்தது. "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" என்று பாரதி விளித்தவையாவும் இலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கொத்துப்பரோட்டா போடும் மாஸ்டரின் வடிவில் சிவமணியைப் பார்த்தவாறே அம்மெட்டுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுக்கான இரவு உணவு தயாராகிவிட்டது. "தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துக்க" என்றார் கடைக்கார அண்ணன். 'வேற எதாவது வேணுமா?" என்றவரிடம் எதுவும் வேண்டாமென்று விட்டான். விரைவில் ஒருநாள் அங்கு சென்று சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓட்டலுக்கு எதிரிலுள்ள டீக்கடையில் நின்று தேநீர் அருந்தினான். கையில் ...