இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாண சாவு

  அந்தக் கட்டிலுக்கு வாய் இருந்திருந்தால் கதறி அழுதிருக்கும்; அறுபது ஆண்டுகளாக தான் தாங்கிய சுமை, இனி பாதியாகக் குறையப் போவதையெண்ணி நிச்சயம் நிம்மதி அடைந்திருக்காது. அவர்களது மிகப்பெரும் வம்ச உருவாக்கத்திற்கு துணையாக அந்த கட்டில் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு பேரனாக நான் கண்டவையெல்லாம், அந்த முதிர்ந்த வயதிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட காதலைத் தான். ஒருவருக்கு உடல்நலம் குன்றும் போதெல்லாம் மற்றொருவர் தாயாக மாறுவதைக் கண்டிருக்கிறேன். படுக்கவைக்கப்பட்டுள்ள பிரேதத்தின் அருகிலிருந்து  சுப்பிரமணியை அப்புறப்படுத்துவதே பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. நடக்கவிருந்ததை முன்கூட்டியே அறிந்துவிட்டதால் தானோ என்னமோ ஒரு வாரமாக அழுதுகொண்டே இருந்தானோ? அவனை அவர்களிருவரும் ஒரு கொள்ளுப்பேரனைப் போலவே நடத்தினார்களேயன்றி நாயாக அல்ல. ஆத்தாவின் மரணத்திற்கான எச்சரிக்கை தான் சுப்பிரமணியின் அழுகையென்று எங்கள் எல்லோருக்கும் ஓரிரு நாட்களிலேயே புரிந்து  விட்டது. தாத்தாவை விட ஆத்தாவிற்கு ஐந்து வயது குறைவு. ஆனாலும் ஆத்தாவின் உடல் சீக்கிரத்திலேயே நொடித்துப் போய்விட்டது. உடலில் இரத்த ஓட்டம் குற...