எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
இந்தியாவின் முக்கியமான சிறப்பம்சம் அதன் பன்முகத்தன்மை தான். சாதி, மதம், இனம், மொழி என்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது. சில அமைப்புகள் இத்தகைய வெறுப்புணர்வை மக்களிடையே திணித்து வருகின்றன. அரசியல் உள்நோக்குடன் இந்தியன் யார்? தமிழன் யார்? போன்ற மரபணு சோதனைகளில் ஈடுபடுகின்றனர். இந்த மண்ணின் மைந்தர்கள் யார்? ஆரியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரை ஈர்க்கும் வகையில் இந்தியா செல்வ செழிப்புடன் இருந்தது. அவர்கள் மூலம் இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் இவ்வாறு பரவின. சாதி கட்டமைப்புகளும் வலுப்பெற்றன. இந்நிலையில் இந்தியா யாருக்கு சொந்தம்? ஆதித்தமிழர் யார்? போன்ற வினாக்கள் எழுகின்றன. மதவாதப் பிரிவினை மதரீதியாக நாட்டைப் பிரிக்க நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களை இந்தியர் அல்ல என வாதிடுகின்றனர். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையில், இஸ்...