நாகப்பட்டினம் - சீற்றங்களும் சிறப்புகளும்
கஜா புயலின் கோர தாண்டவத்தால் பெரும் அழிவிற்கு உண்டான தமிழக டெல்டா மாவட்டங்களில் முக்கியமான ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம். இயற்கை சீற்றங்களின் பிடியில் சிக்குவது நாகை மாவட்டத்திற்கு இது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் அழிவை எதிர்பார்த்து காத்திருப்பது இம்மாவட்ட மக்களின் விதி. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்குப் பிறகு, கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இயற்கை சீற்றங்களுக்கும், அழிவுகளுக்கும் மட்டுமே உரித்தான மாவட்டமா நாகப்பட்டினம்? நாகப்பட்டினம் - பண்டைை வரலாறு நாகை மாவட்டம் நீண்ட நெடிய வரலாற்று சிறப்பு உடையது. பண்டைய தமிழ் மன்னர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. சங்க காலம் தொட்டே, அயல்நாட்டு தொடர்பு கொண்ட நகரம் நாகப்பட்டினம். இலங்கையில் இருந்து வந்து குடிபுகுந்த ''நாகர்" இன மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பிட்ட பெயரே 'நாகப்பட்டினம்'. (பட்டினம்- கடற்கரை நகரம்) நாகலிங்க மலர்கள் அதிகம் மலர்ந்ததா...