இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

படம்
வெண்மேகத்தில் வீற்றிருக்கும் 'மழை' அவள் வேதனையில் காத்திருக்கும் 'மண்' அவன் மண்ணின் காதலுக்கு 'மரம்' தூதுவன் வேதனையை அறிந்த வேர்களோ விண்ணுக்கு தகவல் அனுப்ப தலையசைத்து ஆடின.. குளிர்ந்த காற்றும் உருவாகி ஓடின..  காதல் மனுவைக் காதில் பாடின.. சின்னஞ்சிறு சினமெல்லாம் காதலை சிதைக்கலாமா??? வெள்ளை உடைஉடுத்தி விண்ணில் இருக்கலாமா??? பருவம் வந்தும் பொழியாமல் ஒளிவதேனோ??? ஆகாய அன்னையிடம் இன்னும் அமர்வதேனோ???  கன்னியே கருணையில் கருமை கொள் கார்மேகக் காரிகையாய் உருவம் கொள் காய்ந்த மண்ணின் கவலைப் போக்கச்செல் காதலன்மீது பச்சைக் கம்பளிப் போர்த்தச்செல் உன் ஆனந்த வருகையை நோக்கி.., வானத்தில் மங்கள வாத்தியம் ஒலிக்கும் வானவில் நுழைவு பாதையை அமைக்கும் மரம் உன் காதலை மண்ணிடம் சேர்க்கும் மின்னல் உங்களை புகைப்படம் எடுக்கும் வந்தால் காரிகையே மரத்தின் வேர்வழியே விரைந்தாள் மன்னவனிடம் மழைநீர் வடிவிலேயே  மண்ணின் அகத்திலும் புறத்திலும் ஒடினாய் காதலில் முழுமையடைந்து கடலினில் கூடினாய் காலமெனும் கதிரவன் கண்ணில் தோன்றினாய் காரணம் கூ...