இடுகைகள்

கல்யாண சாவு

  அந்தக் கட்டிலுக்கு வாய் இருந்திருந்தால் கதறி அழுதிருக்கும்; அறுபது ஆண்டுகளாக தான் தாங்கிய சுமை, இனி பாதியாகக் குறையப் போவதையெண்ணி நிச்சயம் நிம்மதி அடைந்திருக்காது. அவர்களது மிகப்பெரும் வம்ச உருவாக்கத்திற்கு துணையாக அந்த கட்டில் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு பேரனாக நான் கண்டவையெல்லாம், அந்த முதிர்ந்த வயதிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட காதலைத் தான். ஒருவருக்கு உடல்நலம் குன்றும் போதெல்லாம் மற்றொருவர் தாயாக மாறுவதைக் கண்டிருக்கிறேன். படுக்கவைக்கப்பட்டுள்ள பிரேதத்தின் அருகிலிருந்து  சுப்பிரமணியை அப்புறப்படுத்துவதே பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. நடக்கவிருந்ததை முன்கூட்டியே அறிந்துவிட்டதால் தானோ என்னமோ ஒரு வாரமாக அழுதுகொண்டே இருந்தானோ? அவனை அவர்களிருவரும் ஒரு கொள்ளுப்பேரனைப் போலவே நடத்தினார்களேயன்றி நாயாக அல்ல. ஆத்தாவின் மரணத்திற்கான எச்சரிக்கை தான் சுப்பிரமணியின் அழுகையென்று எங்கள் எல்லோருக்கும் ஓரிரு நாட்களிலேயே புரிந்து  விட்டது. தாத்தாவை விட ஆத்தாவிற்கு ஐந்து வயது குறைவு. ஆனாலும் ஆத்தாவின் உடல் சீக்கிரத்திலேயே நொடித்துப் போய்விட்டது. உடலில் இரத்த ஓட்டம் குற...

கருவாட்டுக் குழம்பு

 தான் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல், பணியில் மனநிறைவும் இல்லாமல் வேலைசெய்யும் பலரில் அவனும் ஒருவன். பழமையான துறையாயினும் பலரால் மறக்கப்பட்டு வரும் அஞ்சல் துறையில் பணிபுரியும் அவனுக்கு அருகிலுள்ள கடலோர கிராம மக்களுக்கு கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி.  தனிநபர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களைத் தொழில்நுட்ப வளர்ச்சி கையகப்படுத்தி விட்டமையால், வங்கி மற்றும் இதர தொழில் சார்ந்த கடிதங்களே எஞ்சியுள்ளன. தனது பணியில் இல்லாத மன நிறைவை கடலின் அலைகளும் இரைச்சல்களும் அவனுக்கு அளித்துக் கொண்டிருந்தன. மனிதர்களின் துன்புறுத்தல்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த சமுத்திரத் தாயின் ஒரு நாள் சீற்றத்திற்கு இரையான கிராமங்களில் அதுவும் ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நகரங்கள் கடலுக்குள் மூழ்கியதாக சொல்லப்படும் கதைகளை உண்மையென உணர்த்தும் கிராமம் அது. சிதிலமடைந்த வீடுகளின் சுவர்களே ஆங்காங்கு எஞ்சியிருக்கின்றன. சில குடும்பங்கள் மட்டுமே சேதமடைந்த வீடுகளை சரிசெய்து அங்கு வாழ்ந்து வருகின்றனர். தனியாக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப் பட்டாலும் தொழிலுக்காக அம்மக்கள் அங்கு வந்துதானே ஆகவேண்டு...

அடக்க மறு

 ஆண்கள் அழக்கூடாது என்று சமூகம் ஏற்படுத்திய பிம்பத்தினாலும், தனது அழுகை வீட்டிலுள்ளோரை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று நினைத்ததாலும், தனது நிலையை நினைத்து மனதிற்குள் அழுதுகொண்டிருந்தான் அவன். எப்போதும் தான் சாப்பிட்ட தட்டினைத் தானே எடுத்து செல்லும் பழக்கம் உள்ளவனின் தட்டை இன்று அவனது அப்பா எடுத்து செல்வதை இவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவாரமாக இதேதான் வீட்டில் இவனது நிலை.  அடிக்கடி ஏற்படுவது போல இம்முறையும் இவனது கால்களில் ஏற்பட்ட வலியும் வீக்கமும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்ற இவனது கணிப்பு பொய்யாகிப் போனது. ஒரு வாரத்தைக் கடந்தும் வலியும் வீக்கமும் குறையவே இல்லை. தொடக்கத்தில் இடது கால் கட்டை விரலில் மட்டும் தொடங்கிய வலி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் முழுமைக்கும் பரவியதோடு மட்டுமின்றி கால் கொழுக்கட்டையைப் போல் வீங்கி விட்டது. இரு கால்களையும் தரையில் ஊன்றி நடப்பது அவ்வளவு எளிய காரியமாக இல்லை அவனுக்கு. பாதம் முழுமைக்கும் ஊசிகளால் குத்துவது போன்று வலி இருந்தது. சிறிது அழுத்தம் கொடுத்தால் கூட வலி தொடை வரை பரவியது. கழிவறை செல்வதுகூட இவனுக்கு கடினமானதாகவே இருந்து வருகிறது.  ...

விருந்து

 மாநகரின் பிரதான சாலை. மேம்பாலங்கள் அமைந்திருப்பினும் நெரிசல்களுக்குக் குறைவேதுமில்லை.  பலரைப் போலவும் தனது கடந்தகால அடையாளங்களை மறந்து தனக்கென புதியதோர் அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற கனவுடன் மாநகரில் குடியேறியவர்களில் அவனும் ஒருவன்.  அவனது அறையிலிருந்து சாலைக்கு செல்லும் வழியில் உள்ள குறுகலான நடைபாதையில் அமைந்துள்ளது அய்யனார் ஓட்டல். பட்ஜெட்டுக்குள் சாப்பிடவிரும்பும் அசைவப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். அக்கடையின் மசாலா வாசனை தெருவெங்கும் மணந்துகொண்டிருந்தது. "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" என்று பாரதி விளித்தவையாவும் இலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கொத்துப்பரோட்டா போடும் மாஸ்டரின் வடிவில் சிவமணியைப் பார்த்தவாறே அம்மெட்டுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுக்கான இரவு உணவு தயாராகிவிட்டது. "தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துக்க" என்றார் கடைக்கார அண்ணன். 'வேற எதாவது வேணுமா?" என்றவரிடம் எதுவும்‌ வேண்டாமென்று விட்டான். விரைவில் ஒருநாள் அங்கு சென்று சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓட்டலுக்கு எதிரிலுள்ள டீக்கடையில் நின்று தேநீர் அருந்தினான். கையில் ...

உமிழ்வினை

பணிக்குச் செல்லும் உழைக்கும் வர்க்கம் கூடடையும் நேரம். இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட மங்கலான மாலைப்பொழுது. சாலையோரக் கடைகளும் மின்விளக்குக் கம்பங்களும் ஒளியை உமிழத்தொடங்கியிருந்தன. வழக்கம்போல எதிர்காலம் பற்றிய சிந்தனைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் அவன். அலுவலகத்தில் தனது உயரதிகாரிகளிடம் வாங்கிய திட்டுகளுக்கு பதில் கூறும் தருணம்‌ இதுவே.  என்றைக்கும் இல்லாத அளவு போக்குவரத்து நெரிசல் அன்று அதிகமாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சிக்கொடிகளும் வரவேற்புப் பலகைகளும் நிறைந்திருந்தன. சேலம் வைத்தியரைப்போன்று தங்களது கட்சித்தலைவரின் அடுத்தடுத்த தலைமுறைகளின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் அலங்கரித்த பேனர்களைத் தொண்டர்கள் நெடுவெங்கிலும் வைத்திருந்தனர். கட்சியின் முக்கியப் பிரமுகரான சாராய ஆலை அதிபர் வருகைக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் அவை.    இரண்டு மைல் தொலைவிற்கு வாகனங்கள் அனைத்தும் நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தன. எந்தப் பலனும் இல்லையென்று தெரிந்தாலுமே வாகன ஓட்டிகள் ஒலிப்பானைத் தொடர்ந்து ஒலிக்கவிட்டுக்கொண்டே இருந்தனர்.  சுற்றுவட்டார...

நல்ல நேரம்

ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுது. வாரம் முழுதும் ஓடித் திரியும் மனித எந்திரங்களுக்கு ஓய்வளிக்கும் ஒருநாள். எதனைத் துரத்துகிறோம் என்றறியாமல்  நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன், தான் விரும்பியதை யெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என விரும்பும் ஒருநாள். ஆனால், உறங்கிக் கழிப்பதிலே பாதியும் திங்கள் கிழமையைப் பற்றிய அச்சத்தில் மீதியுமாய் முடிந்து போகிறது.  கதை எழுதவேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை இன்றாவது அடைந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் அவன். வீட்டிலுள்ள அனைவரும் கடற்கரைக்குச் சென்றுள்ளதால் அடுத்த சிலமணி நேரங்களுக்கு தொந்தரவுகள் ஏதுமிருக்காது என்று எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் தான் எடுக்கும் , ''இந்த வருஷத்தில இருந்து டைரி எழுதனும்" தீர்மானத்திற்காக வாங்கிய டைரிகளில் ஒன்றும் பேனாவும் அவன் முன் இருந்தன. உதவிகள் பல செய்தாலும் தன்னை அநேக வேளைகளில் உருப்பட விடாமல் செய்யும் தன் நண்பனான அலைபேசியை தன்னுடன் அழைத்துவர வில்லை. தான் எழுத நினைத்த கதையின் போக்கு எவ்வாறாக அமையவேண்டும் என்பதை தொடக்கம் முதல் இறுதி வார்த்தை வரை எப்போதோ மனதிற்கு...

Time to Reforms

படம்
                       சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளாக தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது அதே பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலினால் இரண்டு உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்தை பற்றிய செய்தியினை ஊடகத்தின் வாயிலாக அறியக்கண்டோம்.  கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி இரவு இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் 20-ஆம் தேதி காலையில் பென்னிக்ஸ் இறந்தவுடன் இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.இதனையடுத்து 21-ஆம் தேதி ஜெயராஜும் இறந்தவுடன் வணிகர்களின் போராட்டத்தால் இந்த செய்தி காட்சி ஊடகங்களின் முக்கிய விவாத பொருளாக மாறியது.குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளின் மீது IPC-302 ( Whoever commits murder shall be punished with death or imprisonment for life, and shall also be liable to fine) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றத்திற்கு உடந...