இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் ஆக்கப்படும் புல்வாமா தாக்குதல்

படம்
      கடந்த சில நாட்களாக அனைவருக்கும் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் புல்வாமா தீவிரவாத தாக்குதல். இக்கொடிய தாக்குதலில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் ஆற்றொனாத் துயரில் உள்ளனர். இத்தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதிகள் இருவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாத அமைப்புகளின் மீதும், பாகிஸ்தான் மீதும் போர் தொடுக்க வேண்டும் என்றும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் சாமானியர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. இது தேர்தல் சமயம் என்பதால், இப்பிரச்சினையை தமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் முயற்சிப்பதில் வியப்பொன்றுமில்லை.        காஷ்மீர் தொடர்பான சிக்கல்களும் பிரச்சனைகளும் ஒருநாளில் தோன்றியவை அல்ல. இதன் முழு வரலாறும், அங்குள்ள கள எதார்த்தமும் முழுவதும் தெரியாமல், மேம்போக்காக இதனைப் பற்றி கட்டுரை எழுதுவதில் விருப்பம் இல்லாவிடினும்,  இப்பிரச்சினையை சுற்றி பலராலும் தெரிவிக்கப்படும் கருத்துக்களால் மனதில் ஏற்பட்ட பாதிப்புகளின் வெளிப்பாடு தான் இக்கட்டுரை. மதத்தின் பெயரால் அரசியல்   ...