தீர்ந்த நீரும் தீராத் தாகமும்




வெண்மேகத்தில் வீற்றிருக்கும் 'மழை' அவள்
வேதனையில் காத்திருக்கும் 'மண்' அவன்
மண்ணின் காதலுக்கு 'மரம்' தூதுவன்

வேதனையை அறிந்த வேர்களோ விண்ணுக்கு
தகவல் அனுப்ப தலையசைத்து ஆடின..
குளிர்ந்த காற்றும் உருவாகி ஓடின..
 காதல் மனுவைக் காதில் பாடின..

சின்னஞ்சிறு சினமெல்லாம் காதலை சிதைக்கலாமா???
வெள்ளை உடைஉடுத்தி விண்ணில் இருக்கலாமா???
பருவம் வந்தும் பொழியாமல் ஒளிவதேனோ???
ஆகாய அன்னையிடம் இன்னும் அமர்வதேனோ???

 கன்னியே கருணையில் கருமை கொள்
கார்மேகக் காரிகையாய் உருவம் கொள்
காய்ந்த மண்ணின் கவலைப் போக்கச்செல்
காதலன்மீது பச்சைக் கம்பளிப் போர்த்தச்செல்

உன் ஆனந்த வருகையை நோக்கி..,

வானத்தில் மங்கள வாத்தியம் ஒலிக்கும்
வானவில் நுழைவு பாதையை அமைக்கும்
மரம் உன் காதலை மண்ணிடம் சேர்க்கும்
மின்னல் உங்களை புகைப்படம் எடுக்கும்

வந்தால் காரிகையே மரத்தின் வேர்வழியே
விரைந்தாள் மன்னவனிடம் மழைநீர் வடிவிலேயே

 மண்ணின் அகத்திலும் புறத்திலும் ஒடினாய்
காதலில் முழுமையடைந்து கடலினில் கூடினாய்
காலமெனும் கதிரவன் கண்ணில் தோன்றினாய்
காரணம் கூறாமல் விண்வெளி சென்றடைந்தாய்.

வலிமை தரும் சிறுபிரிவும் நன்று
இக்காதல் முற்றுப் பெறுவதில்லை என்று
சற்று காத்திருக்கும் நிலை இன்று.

இது இருவரின் அன்பு பரிமாற்றம்
இதில் பல்லாயிரம் உயிர்கள் தோற்றம்
பூமியில் புதியதோர் நாடக அரங்கேற்றம்.

வாணரத்தின் வழிவந்த கூட்டம் மட்டும்
வாழ்க்கையில் வசதிகளைத் தேடிப் போராட்டம்.

மலைகளை உடைத்தும், மணல்களைப் பறித்தும்
வனங்களை அழித்தும் இங்கு சூரையாட்டம்.

தொடர்மாடிகள், தொழிற்சாலைகள் எங்கும் உருவாக்கம்
நஞ்சு கழிவுகள் அங்கே வெளியேற்றம்.

மக்கா குப்பைகளை மண்மீது எறிந்தால்
மண்ணில் எப்படி மழைநீர் புகும்??

நிலத்தின் நெஞ்சில் நெகிழியை புதைத்தால்
நதியினில் நீர் எப்படி ஓடும்??

ஆழ்துளை கிணறுகள் எங்கும் துளைத்தால்
 நிலத்தடியில் நீர் எப்படி உயரும்??

குளங்களை எல்லாம் நீ அழித்து
குழாயினுள் நீரை அழைத்தால் வந்திடுமா??


குடுவையில் நீர் அடைத்தால்
குயில்களால் குடிக்க முடிந்திடுமா..?

தேனிகள் தேனை தேடாமல்
தேவைக்கான நீரை தேடிடுமா..?

தாகத்தால் கல்வீசிய காகத்தின்
கதையினில் கிணற்றுநீர் கிடைத்திடுமா..?

பசுமையில் வாழ்ந்த பசுக்கள்
பாலைவனத்தில் பால் சுரந்திடுமா..?

வறட்சியால் வெடித்து வாயினைத் திறக்கும்,
மண்ணின் தாகம் தான் தீர்ந்திடுமா..?
மண்புழுக்களின் சோகம் தான் குறைந்திடுமா..?

தாகத்தால் இறந்த உயிரிகளே ஏராளம் என்றால்
தண்ணீரில் இருந்த உயிரெல்லாம் வாழ்வது சாத்தியமா??

மனிதன் மட்டும் வாழ நினைத்து
மற்ற உயிர்களை சாக வைத்ததான்
எல்லாம் அழிகிறது, எஞ்சியது மனிதம்
இதோ அழைக்கிறது தண்ணீர் பஞ்சம்.

மண்மீது உயிர்கள் எங்குமே - அதில்
மனிதா நீயுமொரு அங்கமே..

சாகாத உயிர்கள் இல்லையே - அவை
சாராமல் வாழ்வது இல்லையே..

தீராத் தாகம் தொல்லையே - அதை
தீர்க்கவொரு திரவம் தேவையே..

வீணாகச்  சிந்தும் தண்ணீரே - நாளை
விடாமல் சிந்தும் கண்ணீரோ..

நீயின்றி நானின்றி நாளைய தலைமுறை வாழ்ந்திடுமே..
நீரின்றி வாழுமா???

 'நதியோரம் நாட்டுமரம் நடுவோம்
நாளெல்லாம் நதிநீர் பெறுவோம்'.

'மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்திடுவோம்
மக்காக் குப்பைகளை தனியே ஒதுக்கிடுவோம்
நெகிழிப் பைகளை இனிமே அழித்திடுவோம்
நீர் நிலைகளை போற்றிக் காத்திடுவோம்
அரசு தான் செய்ய வேண்டும் எனக் கூறாமல்
நம் அனைவரும் இணைந்தே செய்திடுவோம்'.

"நாம் நலம் பெறவும்
நம் நாடும் முன்னேறவும்"...


மேலும் தெரிந்துகொள்வோம்:
மரத்தின் பயன்,நிலத்தடி நீர் மற்றும் நதிகள் அழிந்தை பற்றி புள்ளி விவரங்களுடன் அறிந்து கொள்ள...
(Tamil , English & Hindi)
https://isha.sadhguru.org/rally-for-rivers/saving-our-rivers/?lang=ta

கருத்துகள்

  1. Miga sirapaga thelivaga azhagaga ungal kavithai moolam mazhaiyin thevaiyaiyum athan nanmaigaliyum naam seytha thavarugaliyum veru vadivathil solli irupathu sirapaga ullathu..

    Manithargaluku mattum kaathal illai mazhaikum boomikum ulla kathalai ivalavu sirapaga antha kathaluku naam seytha thurogathaiyum solli irukum vitham arumai.
    Iniyem naam seytha thavarai thiruthi kondu antha kathal irunthalthaan naam iruka mudiyum enra unmayai unaravendum. Atharkana muyarchigalai merkolla vendum..

    Samuga pirachanaiyai ipaadiyum kavithai aaka mudiyum enbathai ungal intha padaipu seythullathu.

    பதிலளிநீக்கு
  2. Miga sirapaga thelivaga azhagaga ungal kavithai moolam mazhaiyin thevaiyaiyum athan nanmaigaliyum naam seytha thavarugaliyum veru vadivathil solli irupathu sirapaga ullathu..

    Manithargaluku mattum kaathal illai mazhaikum boomikum ulla kathalai ivalavu sirapaga antha kathaluku naam seytha thurogathaiyum solli irukum vitham arumai.
    Iniyem naam seytha thavarai thiruthi kondu antha kathal irunthalthaan naam iruka mudiyum enra unmayai unaravendum. Atharkana muyarchigalai merkolla vendum..

    Samuga pirachanaiyai ipaadiyum kavithai aaka mudiyum enbathai ungal intha padaipu seythullathu.

    பதிலளிநீக்கு
  3. Azhagiya tamilil aluthamaana karuthu miga sirappaaga ulathu thozharae😎😎😎💥

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் டா.... really unexpected.... ithuku meka vinoth unaku forward panvaan.... wait

    பதிலளிநீக்கு
  5. இனிய தமிழ் சொற்களால் இனிதாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.... நண்பா......
    உங்கள் கிறுக்கல்கள் தொடர எனது வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

நல்ல நேரம்