அரசியல் ஆக்கப்படும் புல்வாமா தாக்குதல்
கடந்த சில நாட்களாக அனைவருக்கும் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் புல்வாமா தீவிரவாத தாக்குதல். இக்கொடிய தாக்குதலில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் ஆற்றொனாத் துயரில் உள்ளனர். இத்தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதிகள் இருவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாத அமைப்புகளின் மீதும், பாகிஸ்தான் மீதும் போர் தொடுக்க வேண்டும் என்றும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் சாமானியர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. இது தேர்தல் சமயம் என்பதால், இப்பிரச்சினையை தமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் முயற்சிப்பதில் வியப்பொன்றுமில்லை.
காஷ்மீர் தொடர்பான சிக்கல்களும் பிரச்சனைகளும் ஒருநாளில் தோன்றியவை அல்ல. இதன் முழு வரலாறும், அங்குள்ள கள எதார்த்தமும் முழுவதும் தெரியாமல், மேம்போக்காக இதனைப் பற்றி கட்டுரை எழுதுவதில் விருப்பம் இல்லாவிடினும், இப்பிரச்சினையை சுற்றி பலராலும் தெரிவிக்கப்படும் கருத்துக்களால் மனதில் ஏற்பட்ட பாதிப்புகளின் வெளிப்பாடு தான் இக்கட்டுரை.
இந்த தாக்குதலுக்கு எதிர் விளைவாக சிலர் இங்குள்ள இஸ்லாமியர்களின் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைத்து மதங்களிலும் நல்லவர்களும் தீயவர்களும் கலந்துதான் உள்ளனர். ஒரு சிலரின் கொடுஞ்செயல்களுக்காக அவர்களது மதத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் பழித்து பேசுவது சரியாக அமையாது. இந்திய நாட்டின் மீதுள்ள தேசப்பற்றில் மற்றவர்களுக்கு சற்றும் குறையாதவர்களாக இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். இந்த தாக்குதலில் இறந்தவர்களில் இஸ்லாமியரும் ஒருவர். இஸ்லாமிய மார்க்கம் அமைதியை போதிக்கும் ஒரு மார்க்கம். அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் போன்ற கொள்கைகளை போதிக்கும் ஒரு மதத்தின் மக்கள் அனைவர் மீதும் தீவிரவாத பழிச்சுமை சுமத்தப்படுவது வருத்தத்திற்குரியது. அனைத்து மதங்களிலும் சமூக விரோதிகளும் தீய சக்திகளும் இருக்கின்றனர். இஸ்லாமிய மதம் பதினான்கு நூற்றாண்டுகளாக இருக்கிறது. தீவிரவாதம் என்பது அரை நூற்றாண்டுகளில் அதிகரித்த ஒன்று!!!
அதே சமயத்தில் மற்றொரு வகையான அரசியலும் இங்கு மதத்தின் அடிப்படையில் இங்கு நடக்கிறது. சிறுபான்மை சமூகத்தினரை சில கட்சிகள் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். இந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதில் கூட தயக்கம் காட்டுகின்றனர். காரணம், சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சம். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தான் கயவர்களை அச்சமூகத்தின் பிரதிநிதிகள் ஆக நினைக்கின்றனர்.
ஒரு குற்றம் நிகழும் போது, அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறான செயல். தவறு செய்தவனைக் குற்றவாளியாக மட்டுமே அணுக வேண்டும்; அந்த மதத்தின் அடையாளமாக அல்ல. அப்துல் கலாம், ரகுமான் போன்றவர்கள் தான் இஸ்லாம் மதத்தின் அடையாளம், தீவிரவாதிகள் அல்ல.
தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றின் முக்கிய தலைவர் ஒருவர், இறந்த வீரர்களில் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை, எனவே அவர்களின் சதி தான் என்று பதிவிட்டிருந்தார். இத்தகைய பிரச்சினைகளில் கூட சாதியைத் திணிக்க எப்படி தான் தோன்றுகின்றதோ???
அமைதியான முறையில் வாழ்க்கை வாழும் நமக்கு காஷ்மீர் மக்களின் இன்னல்கள் பல தெரியாமலே போகின்றன. துப்பாக்கி முனைகளில் கண்விழித்து, வெடிகுண்டு சத்தங்களை இசையாகக் கேட்டு, மரணத்தின் பிடியில் ஒவ்வொரு நொடியும் காஷ்மீர் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் அங்கு இருப்பினும், காஷ்மீர் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் தான் வாழ்கின்றனர். இராணுவ வாகனத்தின் முன்பு ஒரு இளைஞனை பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்தியது நம்மில் பலருக்கு மறந்திருக்கலாம். இத்தகைய கட்டுப்பாடுகள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தையும், அன்னிய உணர்வையும் தந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்றில்லை; நமக்கு ஆதரவாக இந்தியா உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாகிஸ்தானை விடவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர் என்ற உணர்வை காஷ்மீர் மக்களிடம் ஏற்படுத்துவது தான் சரியான தீர்வாக அமையும்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் சிறுபான்மை சமூக மக்கள் எப்போதும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோமோ, நிராகரிக்கப் படுகிறோமோ என்ற ஒருவகை அச்ச உணர்வுடன் இருப்பதில் வியப்பில்லை. இந்நிலையில் அவர்களை சிலர் மூளைச்சலவை செய்து நாட்டுக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். இச்செயலுக்கு பல அப்பாவி இளைஞர்கள் பலியாகின்றனர்.
இச்சூழலில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசும் பெரும்பான்மை மக்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தங்களுக்கு துணையாக நம் நாடு உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தான் மக்களை சமூக விரோதிகளின் பிடியில் இருந்தும், பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்தும் காப்பாற்ற முடியும். காஷ்மீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முதல் படியாக அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். அவ்வளவு கண்காணிப்பில் இருந்தும் இந்நிகழ்வு நடந்தது எப்படி என்று தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் மீது வெறுப்புணர்வையும் பிரிவினைவாதத்தையும் பரப்பி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்பவர்களை அரசு அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்திலும் பலர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது, தமிழகமும் மற்றுமொரு காஷ்மீர் ஆகிவிடுமோ என்று அச்சத்தை அளிக்கிறது.
அதே போல் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், இந்தியா தங்களது தேசம் என்ற உணர்வை அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். காஷ்மீர் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட லட்சக்கணக்கான பண்டிட்டுகளை (இந்து மக்கள்) மீண்டும் தங்களது சொந்த நிலத்தில் குடியேற்றும் நடவடிக்கைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தீவிரவாதம் அழிக்கப்பட வேண்டும்; ஆனால் அதற்கு போர் மட்டுமே தீர்வாக அமையாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். இனியும் நம் தேசத்தின் எந்தவொரு இராணுவ வீரர்களின் குருதியும் இம்மண்ணில் சிந்தக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.
மதத்தின் பெயரால் அரசியல்

மீண்டும் ஒரு போர்???
தாக்குதலுக்கு எதிர் விளைவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது. பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும் என்றும், உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் என்ற நாடு விடிவதற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் கடுமையாக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் எள்முனை அளவிலும் அய்யமில்லை. ஆனால், பாகிஸ்தான் முழுமையையும் அழிக்க வேண்டும் என்பதும், அந்நாட்டு மக்கள் அனைவரையும் விரோதிகளாக எண்ணுவதும் சரியல்ல.
நாம் நினைக்கும் அளவுக்கு போர் என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இப்போது 44 வீரர்கள் இறந்ததற்காக போரிட வேண்டும் என்று நாம் கூறினால், போரின் போது ஆயிரக்கணக்கான வீரர்களை நாம் இழக்க நேரிடலாம். போரில் நாம் வெற்றி பெற்றாலுமே எளிதில் ஈடுகட்ட முடியாத இழப்பு நேரிடும். PUBG விளையாடும் நமக்கு போர் எளிதான ஒன்றாக தோன்றலாம். ஆனால் உண்மையில் போரினால் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஒரு நாடு இச்சமயத்தில் போரில் ஈடுபட்டால் இங்கு முதலீடு செய்ய பலர் அஞ்சுவர். இதனால் பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
பூகோள ரீதியாக நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான நாடுகள் நம்மிடம் நட்பு பாராட்டுவதில்லை. சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் ஐநாவில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடு சீனா தான். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லைகளில் சீன இராணுவத்தின் ஊடுருவல் அதிகம் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் பல பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் சாதாரணமாக நினைக்கும் இப்போர் மூன்றாம் உலகப்போருக்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்துவிட்டால் என்ன செய்வது???
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடுகள். மற்றுமொரு ஹிரோஷிமா, நாகசாகி இங்கே உருவாக வேண்டுமா???.
கடந்த ஆண்டு "PRAY FOR SYRIA" என்று பதிவிட்டுக் கொண்டிருந்த நாம் எதிர்காலத்தில் "PRAY FOR KASHMIR" பதிவிடும் நிலையைத் தான் எதிர்பார்க்கிறோமா???
இலங்கையில் பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் போரில் இறந்ததை மறந்து விட்டோமா???
போர் வேண்டும் என்று விரும்பும் நம்மில் யாரும் போரில் சண்டையிடப் போவதில்லை. போர் என்பது கண்டிப்பாக உடனடித் தீர்வாக அமையலாம். ஆனால் நிரந்தரத் தீர்வைத் தராது. ஏற்கனவே நாம் பாகிஸ்தானுடன் மூன்று முறை போரிட்டு வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும் இப்பிரச்சினை இன்று வரை தீரவில்லை. பிரச்சினைகளை உணர்வு ரீதியாக மட்டுமே அணுகுவது சரியான ஒன்றாக அமையாது.

கனவு மெய்ப்பட வேண்டும்
அமைதியான முறையில் வாழ்க்கை வாழும் நமக்கு காஷ்மீர் மக்களின் இன்னல்கள் பல தெரியாமலே போகின்றன. துப்பாக்கி முனைகளில் கண்விழித்து, வெடிகுண்டு சத்தங்களை இசையாகக் கேட்டு, மரணத்தின் பிடியில் ஒவ்வொரு நொடியும் காஷ்மீர் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் அங்கு இருப்பினும், காஷ்மீர் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் தான் வாழ்கின்றனர். இராணுவ வாகனத்தின் முன்பு ஒரு இளைஞனை பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்தியது நம்மில் பலருக்கு மறந்திருக்கலாம். இத்தகைய கட்டுப்பாடுகள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தையும், அன்னிய உணர்வையும் தந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்றில்லை; நமக்கு ஆதரவாக இந்தியா உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாகிஸ்தானை விடவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர் என்ற உணர்வை காஷ்மீர் மக்களிடம் ஏற்படுத்துவது தான் சரியான தீர்வாக அமையும்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் சிறுபான்மை சமூக மக்கள் எப்போதும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோமோ, நிராகரிக்கப் படுகிறோமோ என்ற ஒருவகை அச்ச உணர்வுடன் இருப்பதில் வியப்பில்லை. இந்நிலையில் அவர்களை சிலர் மூளைச்சலவை செய்து நாட்டுக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். இச்செயலுக்கு பல அப்பாவி இளைஞர்கள் பலியாகின்றனர்.
இச்சூழலில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசும் பெரும்பான்மை மக்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தங்களுக்கு துணையாக நம் நாடு உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தான் மக்களை சமூக விரோதிகளின் பிடியில் இருந்தும், பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்தும் காப்பாற்ற முடியும். காஷ்மீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முதல் படியாக அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். அவ்வளவு கண்காணிப்பில் இருந்தும் இந்நிகழ்வு நடந்தது எப்படி என்று தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் மீது வெறுப்புணர்வையும் பிரிவினைவாதத்தையும் பரப்பி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்பவர்களை அரசு அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்திலும் பலர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது, தமிழகமும் மற்றுமொரு காஷ்மீர் ஆகிவிடுமோ என்று அச்சத்தை அளிக்கிறது.
அதே போல் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், இந்தியா தங்களது தேசம் என்ற உணர்வை அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். காஷ்மீர் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட லட்சக்கணக்கான பண்டிட்டுகளை (இந்து மக்கள்) மீண்டும் தங்களது சொந்த நிலத்தில் குடியேற்றும் நடவடிக்கைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தீவிரவாதம் அழிக்கப்பட வேண்டும்; ஆனால் அதற்கு போர் மட்டுமே தீர்வாக அமையாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். இனியும் நம் தேசத்தின் எந்தவொரு இராணுவ வீரர்களின் குருதியும் இம்மண்ணில் சிந்தக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.
"கனவு மெய்ப்பட வேண்டும்;
கைவசமாவது விரைவில் வேண்டும்"
"Eye for an eye leaves the whole world blind'
- Mahatma Gandhi

Superu!!!!
பதிலளிநீக்குWell said da
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்குகாஷ்மீர், இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் ஒரு அழகான இடம். இந்த இடம் போர்க்களம் ஆனது ஏன்? துப்பாக்கி சூட்டிற்கும் வெடிகுண்டு சத்ததுக்கும் நடுவில் வாழ்வதுதான் காஷ்மீர் மக்கள் நிலையோ??
பதிலளிநீக்குபுல்வாமா தாக்குதல் ஒன்றும் காஷ்மீர் மக்களுக்கு புதிதல்ல. நாடு முழுவதும் இந்த தாக்குதல் பரவ காரணம் நடந்த இடம் மற்றும் பலி எண்ணிக்கை.
தாக்குதலை நடத்தியவன் 25 வயது இளைஞன் ஒரு இந்தியன். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய ஒருவன் நாட்டின் அழிவிற்கு வழிவகுத்தது எவ்வாறு?
தினனும் நன்றாக உறங்கி நல்ல உணவருந்தி இஷ்டம் போல் வாழும் நமக்கு காஷ்மீர் மக்களின் ஏக்கமும் துயரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காஷ்மீர் நாட்டின் எல்லை பகுதியாக இருப்பதால் பாதுகாப்பிற்கு அங்கு ராணுவம் அவசியம். எனினும் ராணுவத்தால் அங்கு வாழும் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமை பறிபோவது நியாயம் இல்லை.
காஷ்மீர் இஸ்லாம் மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி. எனவே அங்குள்ள மக்கள் பாகிஸ்தான் உடன் இனிய விரும்பலாம். எனினும் அது ஏற்புடையத்தன்று. அவர்கள் அவ்வாறு நினைக்க காரணம் தங்கள் உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டு விடுமோ தங்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற நினைப்பே. இதை சில சமுகவீரோத இயக்கங்கள் தங்கள் சுயநலனுக்கு ஏதுவாக மக்களின் மனநிலையை குறிப்பாக இளைஞர்களை நாட்டுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். அதன் விளைவே புல்வாமா தாக்குதல்.
எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நன்றாக வாழும் நாமே சிலரது பேச்சை கேட்டு தனி தமிழகம் வேண்டும் என்று கோசமிடுகிறோம். நித்தம் தொந்தரவுக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களின் மனநிலையை எளிதாக மாற்றுவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நாட்டின் பாதுகாப்பிற்கு காஷ்மீர் தேவை என்று நினைத்த அரசு காஷ்மீர் மக்களின் நலனை நினைகாததே காரணம். இனியேனும் காலம் தாழ்த்தாமல் மத்திய மாநில அரசுகள் காஷ்மீர் மக்களுக்கு காஷ்மீர் எல்லை பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் அதற்கான ராணுவ அவசியம் மேலும் அவர்கள் ஒரு வளமான பாதுகாப்பான சுதந்திர நாட்டில் உள்ளார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். இதுவே காஷ்மீரில் அமைதி திரும்ப வழிவகுக்கும்.
தாக்குதல் எப்போது நடிப்பின் அதற்கு காரணம் ஒட்டுமொத்த பாக்கிஸ்தான் என்று நினைப்பது. நம் நாட்டில் கயவர்கள் இருப்பது போலவே பாகிஸ்தானிலும் உள்ளார்கள். அங்கு வாழும் மக்களும் தீவிரவாதத்துக்கு எதிரான மனம் கொண்டவர்களே.. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் அந்நாட்டு அரசையே நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் உலக நாடுகள் உதவியுடன் ஆதரவு அளிப்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
ஓட்டு மொத்த பாகிஸ்தானையும் போர்தொடுத்து அழிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையத்தன்று. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஈரானில் அங்குள்ள செல்வங்களை சூறையாட சண்டை போட்டு கொண்ட போது அந்த இரு நாடுகளையும் தீவிரவாத நாடு என்று யாரும் கூறவில்லை. அப்படி இருக்க சில சமூகவிரோதிகள் செய்யும் செயலுக்கு பாகிஸ்தானை அழிக்க வேண்டும் என்ற கருத்து நமது அறியாமையே.. ஒன்றை மறக்க வேண்டாம் பாக்கிஸ்தான் முன்பு இந்தியாவுடன் இருந்த ஒரு பகுதி அங்கு இருக்கும் மக்கள் நம் நாட்டவரின் உறவினர்களே .. எவ்வாறு இலங்கையில் தமிழர் உள்ளார்களோ அவ்வாறே பாகிஸ்தானில் நம் உறவினர்களே உள்ளனர் . அவர்கள் மேல் போர்தொடுப்பது நம்மீது தொடுப்பது போன்றே.
மிகப்பெரிய தாக்குதல் நடந்த ஒரு வார காலத்துக்கு அதை முன்னிறுத்தி பாகிஸ்தானுக்கு எதிராகவும் தீவிரவாத செயலுக்கு எதிரா பேசுவது போர் செய்ய சொல்வது காஷ்மீர் மக்களுக்கு பயன் தராது. காஷ்மீர் மக்களுக்கு அவர்கள் நல்லதொரு வளமான நாட்டில் தங்கள் உரிமையுடன் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும் வரை நாம் குரல் கொடுக்க வேண்டும். காஷ்மீர் அமைதியில் நமக்கு பெரும்பங்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
அரசியல் கட்சிகள் மட்டுமே இஸ்லாமியர்களை தீவிரவாதத்தோடு தொடர்புசெய்து வாக்கிற்காக பேசுகின்றனர் .. பெரும்பாலான மக்கள் தெளிவுடன் இங்கு ஒற்றுமையுடன் உள்ளனர். தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரரர்களிலும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அஞ்சலி செய்தவர்களிலும் அனைத்து மத மொழி இன மக்கள் தாங்கள் இந்தியன் என்ற ஒற்றுமையுடன் பங்குபெற்றனர்.
காஷ்மீர் மக்களின் நிலயை அனைவரும் உணர நீ மேற்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் வினோ..
Much needed one..!!
பதிலளிநீக்குWell explained vinoth
பதிலளிநீக்கு