ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுது. வாரம் முழுதும் ஓடித் திரியும் மனித எந்திரங்களுக்கு ஓய்வளிக்கும் ஒருநாள். எதனைத் துரத்துகிறோம் என்றறியாமல் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன், தான் விரும்பியதை யெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என விரும்பும் ஒருநாள். ஆனால், உறங்கிக் கழிப்பதிலே பாதியும் திங்கள் கிழமையைப் பற்றிய அச்சத்தில் மீதியுமாய் முடிந்து போகிறது. கதை எழுதவேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை இன்றாவது அடைந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் அவன். வீட்டிலுள்ள அனைவரும் கடற்கரைக்குச் சென்றுள்ளதால் அடுத்த சிலமணி நேரங்களுக்கு தொந்தரவுகள் ஏதுமிருக்காது என்று எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் தான் எடுக்கும் , ''இந்த வருஷத்தில இருந்து டைரி எழுதனும்" தீர்மானத்திற்காக வாங்கிய டைரிகளில் ஒன்றும் பேனாவும் அவன் முன் இருந்தன. உதவிகள் பல செய்தாலும் தன்னை அநேக வேளைகளில் உருப்பட விடாமல் செய்யும் தன் நண்பனான அலைபேசியை தன்னுடன் அழைத்துவர வில்லை. தான் எழுத நினைத்த கதையின் போக்கு எவ்வாறாக அமையவேண்டும் என்பதை தொடக்கம் முதல் இறுதி வார்த்தை வரை எப்போதோ மனதிற்கு...
Thanks
பதிலளிநீக்குVery useful ..
பதிலளிநீக்கு👌👌👌👌 useful re
பதிலளிநீக்கு