TOP 10 PREDICTIONS OF NOSTRADAMUS

 

 நம் வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பது கூட நம்மால் கணிக்க முடியாத நிலையில், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் அடுத்த 2000 ஆண்டுகளுக்கு நடக்கவிருந்த நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார் என்பதை நம்ப முடிகிறதா???

நாஸ்டர்டாமஸ் ( 1503-1556)

          கிபி 1503 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த நாஸ்டர்டாமஸ் தான் அவர். மருத்துவம், ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய இவர், தனது "PROPHECIES" என்ற புத்தகத்தில் எதிர்காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார்.  "Fire gazing'  என்ற முறையில் இவர் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கணித்தார் என கூறப்படுகிறது.

இந்திரா காந்தி படுகொலை 

 இந்திரா காந்தியின் படுகொலை தொடர்பாக இவர் எழுதிய பாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:


        "பெருமகள் அவர்க்கு ராஜ்ஜியம் திரும்பும்;       

எதிரிகள் சதியாளராய் மாறுவர்;    

எழுபதுக்கு மூன்றில் 

துர்மரணம் உறுதியாகும்"


இப்பாடலில்
 1.முதல் வரி: தகுதி நீக்கத்திற்கு பிறகு இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

2.இரண்டாம் வரி: பொற்கோவிலில் காவல்துறையை அனுப்பியதற்காக சீக்கிய சமூகத்தினர் சிலர் இவருக்கு எதிராக சதி செய்தனர்.

3.கடைசி வரிகள்: எழுபதுக்கு மூன்றில்    (70-3) 67 வயதில் இந்திரா காந்தி இறந்தார்.

ராஜிவ் காந்தி படுகொலை

      1991ம் ஆண்டு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியை பற்றிய இவரது பாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:


      "இராஜ ஆணையின் மீதொரு விமானி

       தன் படைவிட்டுத் திரும்பி ஊர்த்தலைவன்          ஆவான்;

     ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகும்,

      காட்டுமிராண்டியின் அச்செயல்,

      வெனிசில் தொற்றுமே அச்சம்"

1.   முதல் & இரண்டாம் வரிகள்: விமானியாக (Pilot) இருந்த ராஜிவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்.

2. மூன்றாம் வரி : பதவியேற்ற ஏழாம் ஆண்டில் கொல்லப்பட்டார்.

3. கடைசி வரி : 'வெனிடோ' என்பது இத்தாலியில் உள்ள நகரம். இந்த வரி கூறுவது  என்னவென்று தங்களுக்கே புரியும் என நம்புகிறேன்.

தென்னிந்தியாவில் ராமர்களின் ஆட்சி

 மூன்று கடல்கள் சங்கமிக்கும் தீபகற்ப பகுதியில் ஒரே சமயத்தில் மூன்று ராமர்கள் ஆட்சி புரிவார்கள் என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட பகுதி 'தென்னிந்தியா'. ஆட்சி செய்த ராமர்கள் பின்வருமாறு:


1. தமிழகம் - ராமச்சந்திரன் (MGR)
2. ஆந்திரா - ராமாராவ் ( NTR)
3. கர்நாடகா- ராமகிருஷ்ண ஹெட்கே.

    இதில் மற்றொரு ஆச்சரியம், 1983-87 என்ற காலக்கட்டத்தில் மேற்கூறிய மூவரும் ஒருசேர ஆட்சி செய்தனர்.

ஹிட்லரின் வாழ்க்கை

      ஐரோப்பாவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் மிகப்பெரிய தலைவன் ஆவான், உலக நாடுகளுக்கு மத்தியில் மிகப்பெரிய தலைவனாக விளங்கும் இவனை தனது சொந்த நாட்டில் உள்ள மக்கள் வெறுப்பார்கள் என்றும் நாஸ்டர்டாமஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அவர் தான் 'ஹிட்லர்'.


      இறுதியில் இவன் போரில் தோற்று இறந்து போவான் என்று எழுதப்பட்டதை அறிந்த ஹிட்லர், தான் போரில் வெல்வது போல புத்தகத்தை மாற்றினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் முடிவில் நாஸ்டர்டாமஸ் கூறியது தான் நடந்தது.

அமெரிக்கா பற்றிய கணிப்புகள்

      1940-களில் நடக்கும் அதிகாரப் போட்டியில் வெற்றி பெறும் நாடு அடுத்த 100 ஆண்டுகளுக்கு உலகிலேயே சக்தி வாய்ந்த நாடாக இருக்கும் என்றார். கென்னடி படுகொலை, ஒபாமா, டிரம்ப் அதிபர் தேர்தல் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.
   
     

        அமெரிக்காவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான இரட்டை கோபுர இடிப்பையும் இவர் குறிப்பிட்டுள்ளார். "வானத்தில் இரண்டு பாறைகள் பறவையால் பற்றியெரியும்" என்று எழுதியுள்ளார்.
      அந்த பாறைகள் தான் World Trade Centre கட்டிடங்கள். அவர் குறிப்பிட்ட பறவை விமானம்.

          ''யானைக்கும் அடிசறுக்கும் அல்லவா?" இம்முறை அவர் எழுதியதில் சிறிய (ஏ)மாற்றம். அவர் குறிப்பிட்ட ஆண்டு 1999, நடந்ததோ 2001.

https://youtu.be/egWb_ymRbqI

நமது எதிர்காலம் பற்றி நாஸ்டர்டாமஸ்

         2018-2025 காலக்கட்டத்தில் உலகில் வெப்பமயமாதல், வர்த்தக நிறுவனங்களின் வீழ்ச்சி, நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு, மூன்றாம் உலகப்போர் போன்றவை நடக்கும் எனக் குறிப்பிட்டார் நாஸ்டர்டாமஸ். இயற்கையினை பாதுகாப்பதில் நாம் அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

https://youtu.be/naBZbxyUnpc

    இக்காலத்தில் முக்கடல் கூடுமிடத்திலிருந்து (தமிழகம்) தலைவன் ஒருவன் எழுச்சி பெறுவான் என்றும், நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வான் என்றும் எழுதியுள்ளார்.
   அவர் குறிப்பிட்டதை நிறைவேறும் வகையில் எதிர்வரும் தேர்தல்களில் நமது பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்;

நம் எதிர்காலம் நம் கையில்; 
இன்னும் சரியாக சொன்னால்
''விரல் நுணியில்"
   

x

கருத்துகள்

  1. உன் மூன்று வரிகள் கொண்ட மூலக்கருத்தை,
    உணர்த்த உனது முயற்சியோ புதிது..
    அதற்கு உனது இந்த பதிவு தான் சான்று....
    வாழ்த்துக்கள் தோழா..
    வளர்க உனது வாக்கியங்கள்...

    "நல்மாற்றத்தை விரும்பும்
    உறுதியான உள்ளமும்,
    தெளிவான முடிவும் கொண்டு..,
    கறைப்படியா கரங்களால்,
    கட்டாயம் கை விரலின் நகத்தை மட்டும் கறைப்படுத்த...
    கண்டுவிடும் நம்நாடு முன்னேற்றத்தை"...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்