சபரிமலை: சடங்குகளும், சங்கடங்களும்

     

 
   சமீபத்தில் உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பு தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைவழிபாடு என்பது இந்திய அரசியலமைப்பு மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதால், பெண்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.

           இத்தீர்ப்பு வெளிவந்த நாள் முதலே ஆதரவும் எதிர்ப்பும் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. தங்களது மத நம்பிக்கைகளை காப்பாற்ற மக்கள் போராடும் சமயத்தில், இதனை தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



       இந்நிலையில் நேற்று இரண்டு இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று, காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளித்த போதிலும் போராட்டக் காரர்களை மீறி செல்ல முடியாமல் திரும்பி சென்றனர்.  பெண்கள் சபரிமலைக்கு வருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நேற்று சென்றவர் வழிபாடு செய்ய தான் சென்றார்களா என்ற அய்யம் எழுவதன் காரணம் அப்பெண்களில் ஒருவரான ரஹேனா பாத்திமாவின் கடந்த கால நடவடிக்கைகள் தான்.


      அவர் இஸ்லாமிய சமூக பெண் என்பதில் பிரச்சினை ஏதுமில்லை. சபரிமலை கோவிலே இந்து, இஸ்லாமிய நட்பினை எடுத்துக் காட்டுகிறது. சென்னை வெள்ளம் போன்ற சமயங்களில் இஸ்லாமிய உறவுகளின் உதவியுடன் மற்ற சமயப் பெண்கள் மசூதிகளில் தங்கவைக்கப்பட்டது மறக்க முடியாதது. கிருஸ்தவ மதத்தை சேர்ந்த ஜேசுதாஸ் பாடிய பாடல் தான் கோவிலுக்குள் இசைக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெஹைனா பாத்திமா கடந்த காலங்களில், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராட்டங்கள், அரைநிர்வாண போராட்டங்கள், முத்தப்போர் போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டார் என்பது தான், அவர் முதல் ஆளாக சபரிமலைக்கு சென்றதன் பின்னால் உள்நோக்கம் உள்ளதா என சந்தேகிக்க வைக்கிறது. அங்கு செல்லும் முன்பு அவர் வெளியிட்ட புகைப்படமும் சந்தேகம் தருகிறது.


        இந்திய தேசத்தின் சிறப்பே அதன் பன்முகத்தன்மை தான். அவை பாதுகாக்கப்பட வேண்டும். இருப்பினும், அதில் மூடநம்பிக்கை, ஒடுக்குமுறைகள் இருந்தால் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

         நான் பெண்கள் அனுமதிக்கப் படுவதை எதிர்க்கவும் இல்லை, போராட்டங்களை ஆதரிக்கவும் இல்லை. ஆனால் உண்மையில் இறைநம்பிக்கை உள்ள பெண்கள் பலர் அனுமதி அளித்தாலுமே அங்கு செல்ல விரும்பவில்லை என்பதே நிதர்சனம். செல்லவிரும்பும் பெண்கள் அனுமதிக்கப் படலாம், ஆனால் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைகளைக் குலைக்கும் நோக்கில் வந்தால் அது தடுக்கப்பட வேண்டும்.
                        "மனிதம் செழிக்கட்டும்"


கருத்துகள்

  1. Athupola naam paarambariyamaga pinbatriya samaya kotpadugal ipothaya sattangalukku yethuragave sollapattu varugirathu..Aagave athaipatriya sariyana sinthanaiyum thelivum makkalidaye vanthal mattume atharkana sariyana theervai yettamudiyum. Ungaludaiya intha karuthu varaverkathakkathu..keep it up

    பதிலளிநீக்கு
  2. நாட்டின் சிறப்பை உணர்த்தி,
    அதற்கு எடுத்துக்காட்டாக நடுநிலையான வார்தைகளையும் கொடுத்து..
    வெவ்வேறு தரப்பும் தனது சுயகருத்துகளை விடுத்து பொதுவாக சிந்தனை செய்யும் அளவிற்கு உள்ளது இந்த பதிவு...

    அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று..

    வாழ்த்துக்கள் நண்பா...
    தொடர்க உமது வரிகள்..

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பா தொடரட்டும் உன் பதிவு இருந்தாலும் பெண்கள் சபரிமலை செல்ல கூடாது என்பதே என்னுடைய கருத்து....

    பதிலளிநீக்கு
  4. Super ..,மனிதம் செழிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு தோன்றுவது ஒரே ஒரு கேள்வி தான் ...இந்திய தேசத்திலுள்ள பல நூறு கோயில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படாதா கோயில்களே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது ஆனால் வெறும் 6 கோயில்களில் மட்டுமே பெண்கள் அனுமதக்கபடுவதில்லை...அது மட்டுமின்றி ஆண்களை அனுமதிக்கும் ஒரு சில முக்கிய ஸ்தலங்களில் கூட மேலாடை இல்லாமல் தான் அனுமதிக்கின்றனர்..முதலில் இவை எனக்கு கோபமூட்டினாலும் ...நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இதன் பின்பு ஏதோ அறிவியல் காரணத்தை மறைத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது...நாம் இதுவரை நேரில் காணாத பெர்முடா முக்கோணத்தை கூட நம்புகின்றோம்..ஆனால் நாம் நம் பாரம்பரிய நடைமுறைகளில் மறைந்திருக்கும் அறிவியலை அலட்சியப்படுத்துவதே வாடிக்கையாகிவிட்டது ...தற்போது சபரிமலையை வைத்து அரசியல் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் ஆதிகாலத்தில் இருந்து நமது முந்தைய தலைமுறையினர் சபரிமலையில் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லை??? அதற்து பின்பு ஏதேனும் அறிவியல்பூர்வமான காரணம் உள்ளதா இல்லை வெற்று அரசியல்தானா??என்பதை வரலாற்று மற்றும் ஆன்மிக ஆராய்ச்சியாளர்களை கொண்டு தெரிந்து கொண்டால்தான் சபரிமலையைப்பற்றிய சகமனிதனின் கண்ணோட்டமும் மாறும் இதற்கு நிரந்தர தீரவும் கிடைக்கும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்